கட்டுரை எழுதுதல்
தரம் 8 பாடம் 4:3.1
கட்டுரை எழுதுதல்
கட்டுரை என்றால் என்ன?
ஒரு விடயம் தொடர்பானக் கருத்துக்களை விரித்து, ஒழுங்கு முறையிலும், தெளிவாகவும், விளக்கமாகவும், உறுதியாகவும் கட்டுக் கோப்பாகவும் எழுதப்படுவதே கட்டுரை ஆகும்.
கட்டுரை உள்ளதை உள்ளவாறாகக் காட்டி எழுதப்படுவதாகவும் இருக்கலாம். இல்லாதனவற்றைப் புனைந்துரைப்பதாகவும் இருக்கலாம். அனுபவங்கள், உணர்ச்சிகள், என்பவற்றைப் பகிர்ந்து கொள்வதாகவும் இருக்கலாம். கற்பனைக்கெட்டும் விடயங்களைச் சித்திரிப்பதாகவும் இருக்கலாம். கட்டுரை ஒன்றானது எவ்வாறு அமைய வேண்டும் என்பது கட்டுரையின் வகையையும் அது எழுதப்படும் நோக்கத்தையும் பொறுத்ததாகும்.