வேற்றுமை
தரம் 8 பாடம் 5:2.1
நான்காம் வேற்றுமை
அதிபர் மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கினார்.
இவ்வாக்கியத்தில் மாணவர் என்ற பெயர்ச்சொல் “கு” எனும் உருபை ஏற்கிறது.
“கு” உருபு நான்காம் வேற்றுமைக்குரியதாகும்.
இவ்வாக்கியத்தில் “கு” உருபு கொடைப் பொருளை உணர்த்தி வந்துள்ளது. இதைப்போலவே கொடைப் பொருளோடு பகை, நட்பு, உறவு, தகுதி, முதற்காரணம், நிமித்த காரணம் ஆகிய பொருள்களையும் நான்காம் வேற்றுமை உணர்த்தும்.
கொடை – புலவருக்கு பொன் கொடுத்தான்.
பகை – கீரிக்குப் பகை பாம்பு.
நட்பு – கண்ணனுக்கு நண்பன் துரியோதனன்.
உறவு – கண்ணம்மைக்கு மகன் விபுலானந்தர்.
தகுதி – மாணவருக்கு உரியது அடக்கம்.
முதற்காரணம் - மேசைக்குப் பலகை வாங்கினேன்.
நிமித்தகாரணம் – கூலிக்கு வேலை செய்தான்.
நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் – பொருட்டு, ஆக, நிமித்தம் என்பனவாகும்.
உதாரணம் -:
கூலியின் பொருட்டு வேலை செய்தான்.
கூலிக்காக வேலை செய்தான்.
கூலி நிமித்தம் வேலை செய்தான்.