வேற்றுமை
தரம் 8 பாடம் 6:2.1
ஐந்தாம் வேற்றுமை
விமலனில் ரூபன் கெட்டித்தனம் மிக்கவன்.
இங்கு விமலன் என்ற பெயர்ச்சொல் ‘இல்’ எனும் உருபை ஏற்று வந்துள்ளது. ‘இல்’ என்பது ஐந்தாம் வேற்றுமைக்குரிய உருபாகும். அத்துடன் ‘இன்’ எனும் உருபும் ஐந்தாம் வேற்றுமையை உணர்த்தி வரும். மேலுள்ள வாக்கியத்தில் ‘இல்’ உருபு ஒப்புப் பொருளில் வந்துள்ளது.
ஒப்புப் பொருளோடு நீங்கல், எல்லை, ஏது என்ற பொருள்களும் ஐந்தாம் வேற்றுமையால் உணர்த்தப்படுவனவாகும்.
நீங்கல் – மலையில் வீழ் அருவி.
எல்லை – இலங்கையின் வடக்கு இந்தியா.
ஒப்பு – இராமனில் பரதன் சிறந்தவன்.
ஏது – பாட்டில் சிறந்தவன் பாரதி.
ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகள் –
இருந்து, நின்று, காட்டிலும், பார்க்கிலும், விட ஆகிய சொல்லுருபுகள் ஐந்தாம் வேற்றுமையை உணர்த்தி நிற்கும்.
உதாரணம் :
மரத்திலிருந்து விழுந்த கனி.
அவனைக் காட்டிலும் இவன் பெரியன்.
கமலாவைப் பார்க்கிலும் சீதா புத்திசாலி.
குமாரை விட கதீஸ் நல்லவன்.