ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
தரம் 8 பாடம் 6:3.1
ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
ரகர, றகர சொற்கள்
பரந்த - எமது ஆசிரியர் பரந்த உள்ளம் கொண்டவர்.
பறந்த – பறந்த கிளி மரத்தில் சென்று அமர்ந்தது.
மரி – பிறந்தவர், மரிப்பது உலக வழக்கு.
மறி – மந்தையிலுள்ள மறி வழி தவறிச் சென்றது.
ரகர, றகர சொற்களும் பொருளும்
முருகு – அழகு, தேன், தெய்வம்
முறுகு – திண்மை
திரை - அலை, திரைச்சீலை
திறை – கப்பம், அரசிலை
நரை – மூப்பு, வெளுத்தமயிர்
நறை – தேன், கள், குற்றம், வாசனை
நிரை – ஒழுங்கு, பசுக்கூட்டம்
நிறை – நிறைவு
துரு – களிம்பு, குற்றம், செம்மறியாடு
துறு – நெருக்கம்
செரு – ஊடல், போர்
செறு – வயல், கோபம்
தெரியல் – பூமாலை
தெறியல் – சிதறல்
தேரல் – தெரிந்தெடுத்தல்
தேறல் – தெளிவு, கள், தேன்