சார்பெழுத்துக்கள்
தரம் 8 பாடம் 1:4.5
சார்பெழுத்துக்கள்
12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் தமிழ் மொழிக்கு அடிப்படயான எழுத்துகள். இவை தவிர்ந்த உயிர்மெய் எழுத்துகளும், ஆய்த எழுத்தும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப தமக்கு உரிய மாத்திரையை விட நீண்டு அல்லது குறுகி ஒலிக்கும் உயிர் அல்லது மெய் எழுத்துகள் அனைத்தும் சார்பெழுத்துகள் எனப்பட்டன. நன்னூல் 10 வகையான சார்பெழுத்துகளைப் பற்றிக் கூறுகின்றது. அவை பின்வருமாறு.
1. உயிர்மெய் எழுத்துக்கள்
2. முற்றாய்தம்
3. உயிரளபடை
4. ஒற்றளபடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஆய்தக்குறுக்கம்
8. ஐகாரக்குறுக்கம்
9. ஒளகாரக்குறுக்கம்
10. மகரக்குறுக்கம்