பாடல்
பாடம் 9.1
அம்மா
அன்பின் வடிவம் அம்மா
ஆருயிர்தந்தவள் அம்மா
வயிற்றில் சுமந்தவள் அம்மா
வையத்தில் உயர்ந்தவள் அம்மா
கற்றுத் தந்தவள் அம்மா
பெற்று வளர்த்தவள் அம்மா
பண்பைக் கொடுத்தவள் அம்மா
பாசம் பொழிபவள் அம்மா
