விகுதிகளையும் அதன் தன்மை மற்றும் வகைகளையும் அறிந்து கொள்ளல்-02
வினாவுக்கான விடையைச் சுருக்கமாக வரைதல்.

1.முன்னிலை வினை முற்று விகுதிகள் எவை?
ஒருமை - ஐ உ+ம்: உண்டனை
ஆய் உ+ம்: உண்டாய்
இ உ+ம்: உண்டி
பன்மை உம் உ+ம்: படியும்
இரு உ+ம்: படித்தனீர்
ஈர் உ+ம்: படித்தீர்
இவை ஒருமை, பன்மை இரண்டிலும் வரும்.
2. படர்க்கைப் பால் காட்டும் வினை முற்று விகுதிகள் எவை?
அன் உ+ம்: நடந்தனன் - ஆண்பால்
அள் உ+ம்: படித்தனள் - பெண்பால்
அர் உ+ம்: நடந்தனர் - பலர்பால்
து உ+ம்: வந்தது - ஒன்றன்பால்
அ உ+ம்: பறந்தன - பலவின்பால்
3. இரு திணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் வினை எது?
வியங்கோள் வினை
4. பெயரெச்ச விகுதிகள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன:
1) தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதிகள்
2) குறிப்புவினைப் பெயரெச்ச விகுதிகள்
5.தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதிகள் எவை?
அ, உம் எனும் இரண்டுமாகும்.
உ+ம்: அ - செய்த, செய்கின்ற
உம் – செய்யும்
6.குறிப்புவினைப் பெயரெச்ச விகுதிகள் எவை?
அ எனும் ஒன்றே குறிப்புவினைப் பெயரெச்சவிகுதியாகும்.
உ+ம்: அ - கரிய, பெரிய
7. வினையெச்ச விகுதிகள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
இரண்டு வகைப்படும். அவையாவன:
1) தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள்
2) குறிப்புவினை வினையெச்ச விகுதிகள்
8. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள் எவை?
உ, இ, ய், வான், பான் எனப் பலவுள்ளன.
உ+ம்: உ - நடந்து (த் + உ = து)
இ - ஓடி (ட் + இ = டி)
ய் - போய் (ய்)
வான் - வருவான் (வான்)
பான் - உண்பான் (பான்)
9.குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை?
அ, றி, து, மல், இடத்து எனப் பலவுள்ளன.
உ+ம்: அ - மெல்ல (ல் + அ = ல)
றி - அன்றி
து - அல்லது
மல் - இல்லாமல்
இடத்து - அல்லாதவிடத்து
10.பிறவினை விகுதிகள் எவை?
வி, பி, கு, சு, டு, து, பு, று எனும் எட்டுமாகும்.
உ+ம்: வி - செய்வி
பி - நடப்பி
கு - போக்கு
சு - பாய்ச்சு
டு - உருட்டு
து - நடத்து
பு - எழுப்பு