விகுதிகளையும் அதன் தன்மை மற்றும் வகைகளையும் அறிந்து கொள்ளல்-02

வினாவுக்கான விடையைச் சுருக்கமாக வரைதல்.

1.முன்னிலை வினை முற்று விகுதிகள் எவை? 

ஒருமை -  ஐ      உ+ம்: உண்டனை

                   ஆய்    உ+ம்: உண்டாய் 

                     இ      உ+ம்: உண்டி

 

பன்மை    உம்    உ+ம்: படியும் 

                   இரு    உ+ம்: படித்தனீர் 

                   ஈர்     உ+ம்: படித்தீர் 


இவை ஒருமை, பன்மை இரண்டிலும் வரும்.


2. படர்க்கைப் பால் காட்டும் வினை முற்று விகுதிகள் எவை? 

அன்       உ+ம்:  நடந்தனன் - ஆண்பால் 

அள்    உ+ம்:  படித்தனள்  - பெண்பால் 

அர்         உ+ம்:  நடந்தனர்    - பலர்பால் 

து            உ+ம்:  வந்தது      - ஒன்றன்பால் 

அ           உ+ம்:  பறந்தன     - பலவின்பால் 

 

3. இரு திணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாக வரும் வினை எது? 

வியங்கோள் வினை

 

4. பெயரெச்ச விகுதிகள் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:

1) தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதிகள் 

2) குறிப்புவினைப் பெயரெச்ச விகுதிகள்

 

5.தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதிகள் எவை? 

அ, உம் எனும் இரண்டுமாகும். 

உ+ம்: அ - செய்த, செய்கின்ற

           உம் – செய்யும்

 

6.குறிப்புவினைப் பெயரெச்ச விகுதிகள் எவை? 

அ எனும் ஒன்றே குறிப்புவினைப் பெயரெச்சவிகுதியாகும். 

உ+ம்: அ - கரிய, பெரிய

 

7. வினையெச்ச விகுதிகள் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

இரண்டு வகைப்படும். அவையாவன:

1) தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள்

2) குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் 

 

8. தெரிநிலைவினை வினையெச்ச விகுதிகள் எவை?

உ, இ, ய், வான், பான் எனப் பலவுள்ளன.

உ+ம்:  உ - நடந்து (த் + உ = து)

            இ - ஓடி (ட் + இ = டி)

            ய் - போய் (ய்)

           வான் - வருவான் (வான்)

          பான் - உண்பான் (பான்)

 

9.குறிப்புவினை வினையெச்ச விகுதிகள் எவை? 

அ, றி, து, மல், இடத்து எனப் பலவுள்ளன. 

உ+ம்:   அ - மெல்ல (ல் + அ = ல)

              றி - அன்றி

              து - அல்லது 

             மல் - இல்லாமல் 

            இடத்து - அல்லாதவிடத்து

 

10.பிறவினை விகுதிகள் எவை?

வி, பி, கு, சு, டு, து, பு, று எனும் எட்டுமாகும். 

உ+ம்:    வி - செய்வி 

               பி - நடப்பி 

              கு - போக்கு 

              சு - பாய்ச்சு 

              டு - உருட்டு 

              து - நடத்து 

              பு - எழுப்பு

 

மேலும் பாடங்கள்