பாடல்

பாடம் 9.4

 

ஆற்றங்கரை

ஆற்றங்கரைக்குப் போவோமா?

ஆசை தீரக் குளிப்போமா?

ஆற்று மணலில் குதிப்போமா?

ஆரவாரம் புரிவோமா?

நீச்சலடித்து மகிழ்வோமா?

நீந்திக் கரையைக் கடப்போமா?

துணிகளெல்லாம் துவைப்போமா?

துள்ளி மனமும் மகிழ்வோமா?