பாடல்

பாடம் 9.5

 

குருவி

குருவி பறந்து வந்ததாம்

குழந்தை அருகில் நின்றதாம்

பாவம் அதற்குப் பசிக்குதாம்

பாப்பா நெல்லைக் கொடுத்ததாம்

குருவி அந்த நெல்லையே

கொத்திக் கொத்தித் தின்றதாம்

பசியும் நீங்கிப் பறந்ததாம்

பாப்பா இன்பம் கொண்டதாம்.