எழுத்திலக்கணங்களை அறிதல்–04
கீழுள்ள வினாவுக்கான விடையைச் சுருக்கமாகத் தருதல்.

1.போலி எழுத்துக்கள் என்றால் என்ன?
ஓரெழுத்தைப் போல ஒலிக்கும் எழுத்துக்கள் போலி எழுத்துக்கள் எனப்படும்.
2. போலி எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
மூன்று வகைப்படும்
மொழி முதற்போலி எழுத்துக்கள்
மொழி இடைப்போலி எழுத்துக்கள்
மொழி இறுதிப்போலி எழுத்துக்கள்
3. மொழி முதற்போலி என்றால் என்ன? விளக்குக.
சொல்லொன்றின் முதலில் நிற்கும் எழுத்துப் போல் ஒலிக்கும் எழுத்து மொழி முதற்போலி எனப்படும்.
உ+ம்: ப சல் - பை சல், ம யல் - மை யல்
4.மொழி இடைப்போலி என்றால் என்ன? விளக்குக.
சொல்லொன்றின் இடையில் வரும் எழுத்துப் போல் ஒலிக்கும் எழுத்து மொழி இடைப் போலி எனப்படும்.
உ+ம்: அமச்சு - அமைச்சு, அரயர் - அரையர்
5. மொழி இறுதிப்போலி என்றால் என்ன? விளக்குக.
சொல்லொன்றின் இறுதியில் வரும் எழுத்துப் போல் ஒலிக்கும் எழுத்து மொழி இறுதிப் போலி எனப்படும்.
உ+ம்: அக ம் – அக ன் , நில ம் – நில ன்
6. வன்றொடர் உயிர்க் குற்றெழுத்துக்கள் எத்தனை?
வன்றொடர் எழுத்துக்கள் – 6
உயிர்க்குற்றெழுத்துக்கள் – 5
வன்றொடர் உயிர்க்குற்றெழுத்துக்கள் 30
7. வன்றொடர் உயிர் நெட்டெழுத்துக்கள் எத்தனை?
வன்றொடர் எழுத்துக்கள் – 6
உயிர் நெட்டெழுத்துக்கள் – 7
வன்றொடர் உயிர் நெட்டெழுத்துக்கள் – 42
8.நாற்கணங்களும் எவை?
வன்கணம்
மென்கணம்
இடைக்கணம்
உயிர்க்கணம்
9. உயிர்மெய் எழுத்துக்கள் தோன்றும் முறையை விளக்குக?
“அ “ எனும் உயிரானது “க்” எனும் மெய்யுடன் சேர்ந்து “க” எனும் உயிர்மெய் வடிவினைப் பெறுகிறது.
(க் + அ = க)
எழுதும் போது மெய் முதலாயும், உயிர் வருமொழியாயுமே எழுதப்படும். அதாவது மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நின்ற வழியே உயிர்மெய்க்கு மெய் முதலாகவும், உயிர் ஈறாகவும் வரும் என்பது இலக்கணக்காரர் முடிவாகும்.
10. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை எவை?
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் மொத்தம் நூற்று நான்காகும்.
அவையாவன,
உயிர் எழுத்துக்கள் - 12
க், ச், த், ந், ப், ம் எனும் மெய்கள் (6x12) - 72
வ் எனும் மெய்கள் - 08
ய் எனும் மெய்கள் - 06
ஞ் எனும் மெய்கள் - 05
ங் எனும் மெய் - 01
மொத்தம் -104