எழுத்திலக்கணங்களை அறிதல்–04
கீழுள்ள வினாவுக்கான விடையைச் சுருக்கமாகத் தருதல்.

11. பன்னிரண்டு உயிரும் எவ்வாறு மொழிமுதலாக வரும்?
அ - அம்மா உ - உரல் ஐ - ஐயம்
ஆ - ஆமை ஊ - ஊர் ஒ - ஒன்று
இ - இலை எ – எறும்பு ஓ - ஓடம்
ஈ - ஈட்டி ஏ - ஏணி ஒள - ஔடதம்
12. ஙகரமெய் எந்தெந்த உயிர்களோடு சேர்ந்து உயிர்மெய்யாகி மொழி முதலாகி வரும்?
ஙகர மெய்யானது சுட்டெழுத்தின் பின்னும், எ, யா, எனும் வினாவெழுத்தின் பின்னும் அகரத்துடன் சேர்ந்து மொழி முதலாகி வரும்.
உ+ம்: 1) சுட்டின்பின் வருதல் 2) வினா எழுத்தின் பின்வருதல்
அங்ஙனம் எங்ஙனம்?
இங்ஙனம் யாங்ஙனம்?
உங்ஙனம்
13. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் மொத்தம் இருபத்து நான்காகும்.
அவையாவன:
உயிர் எழுத்துக்கள் 12
மெய் எழுத்துக்கள் 11
குற்றியலுகரம் 01
மொத்தம் 24
14. பன்னிரண்டு உயிரும் எவ்வாறு மொழிக்கு இறுதியாகி வரும்?
அ - பல உ - கொடு ஐ - தை
ஆ – பலா ஊ - பூ ஒ - நொ (துன்பப்படு)
இ - தரி எ - சேஎ ஓ - போ
ஈ – தீ ஏ - தே ஔ - கௌ .
எ என்பது செய்யுளிலேயே பெரும்பாலும் மொழிக்கு இறுதியாக வரும்.
15. மொழிக்கு இறுதியாக வரும் மெய்யெழுத்துக்கள் எவை?
ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், எனும் பதினொன்றுமாகும்.
உ+ம்:
ஞ் - உரிஞ் (உறுஞ்சு) ன் - பொன் வ் - தெவ் (பகை)
ண் – கண் ய் - நாய் ழ் - யாழ்
ந் – வெரிந் (முதுகு) ர் - வேர் ள் - வாள்
ம் – மரம் ல் – பல்