இடைநிலை மற்றும் சாரியைகளை அறிந்து கொள்ளல்.

வினாவுக்கான விடையை சுருக்கமாக அணுகுதல்.

11.சாரியைகளின் பயன்பாடு யாது? 

1) சொல்லொன்றின் பொருளை வேறுபடுத்தாது சொல்லின் உச்சரிப்பை அதாவது ஒலிப்பினை இலகுபடுத்தும். 

2) சொல்லொன்றின் பொருளை வேறுபடுத்தாது சொல்லை அழகுப்படுத்தும்.

 

12.சந்தி என்றால் என்ன? 

பகுபதமொன்றில் பகுதியையும், இடைநிலையையும் இணைக்கும் பகுதிக்கு அடுத்து வரும் உறுப்பு சந்தி எனப்படும்.

உ+ம்:    பார்த்தனன் -  (பார்   +     த்         +           த்          +  அன்   +   அன்)

                                          பகுதி     சந்தி    இடைநிலை     சாரியை     விகுதி 

 

13.சந்திகள் எனக் கொள்ளப்படுபவை எவை? 

புணரியலில் கூறப்படும் புணர்ச்சி விகாரங்களான தோன்றுதல், திரிதல், கெடுதல் ஆகிய மூன்றும் சந்திகளாகக் கொள்ளப்படுகின்றன.

 

14.விகாரம் என்பதனை விளக்குக?

பகுபதம் ஒன்றில் வரும் ஓர் எழுத்தாயினும், சாரியையாயினும் தோன்றலுந், திரிதலுங், கொடுதலும் விகாரமாகும்.

உ+ம்:

நடந்தனன் - (நட    +    ந்த்     +          த்       +       அன்    +  அன்) 

                       பகுதி     சந்தி    இடைநிலை  சாரியை   விகுதி 

இங்கே த் எனும் சந்தி ந் என விகாரப்பட்டு வந்துள்ளது.

 

15.விகாரம் எத்தனை வகைப்படும்?

மூன்று வகைப்படும். 

அவையாவன:

தோன்றுதல் விகாரம்    உ+ம்:  பூ + சோலை = பஞ்சோலை 

திரிதல் விகாரம்             உ+ம்:  தாள் + தலை = தாடலை 

கெடுதல் விகாரம்           உ+ம்:  நிலம் + வலயம் = நிலவலயம்

 

16.மேற்கூறப்பட்டவை தவிர்ந்த வேறு விகாரங்களும் உள்ளனவோ? உள்ளனவாயின் அவை எவை? 

ஆம் உள்ளன. அவற்றைச் செய்யுள் விகாரங்கள் என அழைப்பார்கள். 

அவையாவன:

மெல்லொற்றை வல்லொற்றாக்குதல் 

உ+ம்: குறு ந் தாள் - குறு த் தாள் 

 

வல்லொற்றை மெல்லொற்றாக்குதல் 

உ+ம்: த  ட்  டை – த  ண் டை 

 

குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்குதல் 

உ+ம்: பொ த்தறார் - போ த்தறார் 

 

நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்குதல் 

உ+ம்: தீ யோன் - தி யோன் 

 

இல்லாத எழுத்தை வருவித்தல் 

உ+ம்: விளையுமே - விளையு ம் மே 

 

உள்ள எழுத்தை நீக்குதல் 

உ+ம்: சிறி ய விலை - சிறியிலை 

 

சொல்லின் முதலில் குறைதல்

உ+ம்: தா மரை - மரை 

 

சொல்லின் இடையில் குறைதல்

உ+ம்: ஓ ந் தி - ஓதி 

 

சொல்லின் கடையில் குறைதல் 

உ+ம்: நீல ம் - நீல்

 

17.பகாப்பதம் என்றால் என்ன? 

பகுபத உறுப்புக்களாகப் பகுக்க முடியாதனவும், அவ்வாறு பகுப்பதால் பொருட்பயனற்றதாகவும் வரும் சொல் பகாப்பதம் எனப்படும்.

 

18.பகாப்பதம் எத்தனை வகைப்படும்? அவை எவை? 

நான்கு வகைப்படும். அவையாவன:

பெயர்ப்பகாப்பதம்     உ+ம்:  நிலம், நீர், நெருப்பு, காற்று 

வினைப்பகாப்பதம்    உ+ம்:  நட, வா, உண், இரு 

இடைப்பகாப்பதம்      உ+ம்:  இனி, மற்று, அம், போல் 

உரிப்பகாப்பதம்          உ+ம்:  சால, நனி, உறு, தவ, கழி, கூர்

 

மேலும் பாடங்கள்